வட-கிழக்கு சிவில்அமைப்புக்கள் இப்போராட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகளை பாசாங்கு அரசியல் செய்ய அனுமதிக்கூடாது!
ஈழத்தமிழ்மக்கள் தமது தேசிய அபிலாசையை வென்றெடுப்பதற்கான போராட்டத்துக்கு தமது பிள்ளைகளை கொடுத்தார்கள், உடமைகளை கொடுத்தார்கள் , நகைகளை கொடுத்தார்கள் , சாப்பாட்டு பாசலையும் கொடுத்தார்கள். போராட்டத்திற்கு காவலாகவும் நின்றார்கள். தமிழ் மக்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் போராட்ட அழைப்பை ஏற்று போராட்டக் களத்தில்நிற்க தவறவுமில்லை, தயங்கவுமில்லை.
தமிழ் தலைவர்களிடையே காணப்பட்ட போட்டி பொறாமைகளின் மத்தியில், கைவிடப்பட்ட "எழுக தமிழும்" நீர்த்துப் போகச் செய்யப்பட்ட "மக்கள் போராட்டங்களும்" துயர்மிக்க வரலாறாகிப்போன பின்னணியில் இப்பொழுது "பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை" என்ற போராட்டத்தை நடாத்தும் வட-கிழக்கு சிவில்அமைப்புக்கள் இப்போராட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகளை பாசாங்கு அரசியல் செய்ய அனுமதிக்கூடாது என்பதுவே இங்கு முக்கியமானது. இந்த போராட்டம் வட-கிழக்கு தேசியவொருமைப்பட்டை வலுப்படுத்தும் பயணமாக அமையட்டும்.
-திபாகரன் தியாகராஜ்-
கருத்துகள் இல்லை