சிங்கப்பூரில் களைகட்டும் சீன புத்தாண்டு.📷
சிங்கப்பூரில்2021 ஆண்டிற்கு களைகட்டும் சீன புத்தாண்டு.. சீனப் புத்தாண்டு தினத்தன்று சீனர்கள் வழக்கமாக உற்றார் உறவினர்களின் வீட்டிற்குச் சென்று நேரம் செலவிடுவது பாரம்பரியமான ஒன்று.
ஆனால், பண்டிகையைக் கொண்டாடாதவர்கள் விடுமுறையில் என்ன செய்யலாம்?
இதோ ஒரு பட்டியல்...
1) River HongBao 2021
2) இஸ்தானாவில் ஓர் உலா
சீனப் புத்தாண்டிற்காக இஸ்தானா நாளை பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும். இஸ்தானவைச் சுற்றிப்பார்ப்பதோடு வருகையாளர்கள் அங்குள்ள பூங்காக்களில் இளைப்பாறி மகிழலாம்.
காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை இஸ்தானா திறந்திருக்கும். நுழைவுக்கட்டணம் 2 வெள்ளி.
3) கடலடியில் கடல்நாக நடனம்
SEA நீர்வாழ் உயிரினக் காட்சிசாலையில் சீனப் புத்தாண்டு வித்தியாசமான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அங்கு, கடல்நாக நடனம் நீரின் அடியில் நடைபெறும். இரு முக்குளிப்பாளர்கள் நடன ஆடைகளை அணிந்து மீன்களுக்கு மத்தியில் சிறப்பு கடல்நாக நடனத்தைப் புரிவர்.
பிப்ரவரி 19ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடன நிகழ்ச்சி நடைபெறும்.
4) Light to Night விழா
ஐம்புலன்களையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளது இந்த ஆண்டின் Light to Night விழா. சிங்கப்பூரின் இருநூறாம் ஆண்டு நிறைவுடன் இந்த விழாவும் சேர்ந்து வருவதால் மேலும் பல சிறப்பம்சங்களுடன் அது கொண்டாடப்படுகிறது.
பிப்ரவரி 24ஆம் தேதி வரை மரினா பே வட்டாரத்தின் பல இடங்களில் விழாவின் நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
5) கரையோரப் பூந்தோட்டத்தில் சீனத் தோட்டங்கள்
பன்றி ஆண்டை முன்னிட்டு கரையோரப் பூந்தோட்டத்தில் சிறப்பு சீனத் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு நட்டு வைக்கப்பட்ட பன்றிகளைப் போல் காட்சியளிக்கும் செடிச் சிற்பங்களைக் கண்டு, மக்கள் விடுமுறையைக் களிப்புடன் கழிக்கலாம்.
பிப்ரவரி 7ஆம் தேதி வரை சிறப்புத் தோட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
கருத்துகள் இல்லை