8 செய்தியாளர்களிற்கு கொரோனா!


 சுதந்திர சதுக்கத்தில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டங்களை செய்தி சேகரிப்பதற்காக நியமிக்கப்பட்ட எட்டு பத்திரிகையாளர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இந்த வார தொடக்கத்தில் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 200 பத்திரிகையாளர்கள் மீது பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டபோது இவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக அரசு தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக கலுவெவ தெரிவித்தார்.

சுதந்திர தின கொண்டாட்டத்தில் செய்தி சேகரிக்க நியமிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதில் எதிர்மறையான பெறுபேற்றை பெற்ற ஊடகவியலாளர்கள் நேற்று நிகழ்வில் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.