ஏ9 வீதியில் எதிர்ப்பு போராட்டம்!


கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி சோரன் பற்று கிராமத்தில் பொது தேவைக்கு ஒதுக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் காணியினை தனிநபர் ஆக்கிரமித்தவருவதற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் சோரன்பற்று கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கரந்தாய் பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

இதில் பால் பண்ணை மற்றும் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் என பல்வேறு தேவைகளுக்கும் காணிகள் ஒதுக்கப்பட்டதாகவும் இதில் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியினை தனிநபர் ஒருவர் அடாத்தாக பிடித்து அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று  (வெள்ளிக்கிழமை)  மணிக்கு a-9 வீதியில் வீதியின் கரந்தாய் பகுதியில் நடைபெற்று உள்ளது.

இதில் குறித்த காணியை பெற்று தருமாறு கோரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் இணைப்பாளர் கோ.றுசாங்கனிடம் குறித்த கோரிக்கை அடங்கிய மகஜர் மக்களால் கையளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.