மயிரிழையில் உயிர் தப்பிய மருத்துவர்!
மூதுார் தளவைத்தியாசாலையில் கடமைபுரியும் வைத்தியர் சென்றிருந்த வாகனம் அரபிக்கல்லுாரி வீதி சந்தியில் விபத்துக்குள்ளானதில் தெய்வாதீனமாக மருத்துவர் ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

எதிர்முனையில் வந்து கொண்டிருந்த மோட்டார் வாகனம் தப்பான திசையில் வந்ததன் காரணமாக அவரைக் காப்பாற்ற நினைத்து வேகத்தைக் குறைக்க முடியாமல் கார் பக்கத்து வீட்டு வேலியில் மோதிக் கொண்டதில் வாகனம் சேதமடைந்தது.

எனினும் மோட்டார் சைக்கிளில் வந்தவர் அவ்விடத்தில் நிக்காமல் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தப்பியோடியதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் நத்வத்துல் உலமா அரபிக்கல்லுாரி CCTV கெமறாக்களின் துணை கொண்டு மோட்டார் சைக்கில் ஓட்டுனரைப் பிடிக்க மூதுார் வீதிப் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் தீவிர விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.