பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்!


கிளிநொச்சி ஏ-9 வீதியின் பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏ-9 வீதிவழியாக பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் கப்ரக வகனம் ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் இடம்பெற்ற இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.