பிக்பாஸைத் தொடர்ந்து அனிதாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்!


பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து அனிதா சம்பத் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் அனிதா சம்பத். செய்தி வாசிப்பது மட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

மேலும் பல படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார் அனிதா சம்பத். இந்நிலையில் விஜய் டிவியில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் அனிதா சம்பத்.

இதில் தனித்துவமாக விளையாடிய போட்டியாளர்களில் அவரும் ஒருவர். டாஸ்க்குகள் என்று வந்தால் பட்டையை கிளப்பினார். இதனால் ஃபைனல்ஸ் வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆரியுடன் தேவையில்லாமல் சண்டை போட்டு ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.

இதன் எதிரொலியாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் அனிதா சம்பத். அனிதா சம்பத் வெளியே வந்த அடுத்த ஓரிரு நாட்களிலேயே அவரது அப்பா மரணமடைந்தார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.