வீடு புகுந்து முச்சக்கர வண்டிக்கு தீவைப்பு


நவாலி அரசடியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த முச்சக்கர வண்டிக்கு தீமுட்டிவிட்டு தப்பிச் சென்ற நிலையில் அதனுடன் தொடர்புடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மானிப்பாய் காவல்துறையினா் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுக்கு சலோ ரேப் ஒட்டப்பட்டு மாற்றப்பட்ட நிலையில் உரிய இலக்கத்தை அடையாளப்படுத்தி சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று காவல்துறையினா் தெரிவித்தனர்.

நவாலி அரசடியில் உள்ள வீடொன்றுக்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற 5 பேர் கொண்ட கும்பல்,வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீவைத்துவிட்டுத் தப்பித்தது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களை வெளிநாட்டிலிருந்து நடத்துபவர் என காவல்துறையினரின் அடையாளப்படுத்துபவரின் வீட்டுக்குள் புகுந்தே முச்சக்கர வண்டிக்கு தீவைக்கப்பட்டது என்று மானிப்பாய் காவல்துறையினா்தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து குறித்த கும்பலை அந்தப் பகுதி இளைஞர்கள் துரத்திச் சென்றனர். அதன் போது, மோட்டார் சைக்கிளை வீதியில் கைவிட்டு கும்பல் தப்பிச் சென்றது. அந்த மோட்டார் சைக்கிள் மானிப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினா்ர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் அடிப்படையில் கொக்குவில் கே.கே.எஸ். வீதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டுள்ள வரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினா் முன்னெடுத்து வருவதுடன், ஏனைய  நால்வரையும் கைது செய்யும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.