60 ஆயிரத்தைக் கடந்தது கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 684 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 567ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 332 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை