பாலஸ்தீனத்துக்கு தடுப்பூசிகளை வழங்க இஸ்ரேல் ஒப்புதல்!!
நீண்ட இழுபறிக்கு பிறகு பாலஸ்தீனத்துக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க இஸ்ரேல் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் பாலஸ்தீனத்தில் முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் முதற்கட்டமாக 5,000 கொரோனா தடுப்பூசிகளை வழங்க இஸ்ரேல் முன்வந்துள்ளது.
‘பாலஸ்தீனிய அதிகாரசபையில் உள்ள மருத்துவ குழுக்களுக்கு 5,000 தடுப்பூசிகளை அனுப்பப் போகிறோம் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்’ என்று பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தனது அண்டை நாடான பாலஸ்தீனத்துக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க மறுத்து வருவதாக ஐ.நா. மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல், அமெரிக்காவின் ஃபைஸர் மற்றும் மொடர்னா நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனத்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், 158,962பேர் பாதிக்கப்பட்டதோடு, 1,833பேர் உயிரிழந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை