ரஷ்யா தடுப்பூசி தொடர்பில் பகுப்பாய்வு!


ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவது தொடர்பில் பகுப்பாய்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

18 மில்லியன் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள, ஒளடதங்கள் கூட்டுத்தாபனம் மூலம் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை பயன்படுத்தி இந்திய அரசாங்கத்திடம் இருந்து அவற்றை விரைவாக பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதாக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதமளவில் மற்றுமொரு தொகை தடுப்பூசி கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கையுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக்-5 தடுப்பூசி தென்கொரியா உள்ளிட்ட 22 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டு பாவனையில் உள்ளதாகவும், இந்த நிலையில் குறித்த தடுப்பூசியையும் விரைவில் பகுப்பாய்வு செய்து அதற்கான பதிவை பெற்றுத்தருமாறு ஒளடதங்கள் கூட்டுத்தாபனத்திடம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவது தொடர்பாக பகுப்பாய்வு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.