3 நாடுகளின் தடுப்பூசிகளை பதிவு செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளன


ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வீ, சீனாவின் சினோபோர்ம் மற்றும் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை நாட்டில் பதிவு செய்வதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசிகள் தொடர்பாக தற்போது பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவின் தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கான அனுமதி கோரி கிடைத்த விண்ணப்பங்களுக்கு அமைய விசேட நிபுணர் குழுவினால் இந்த தடுப்பூசிகள் தொடர்பான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.