தென்னாபிரிக்கா அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை முழுமையாக தடை செய்தது!


ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை மக்களுக்குப் பயன்படுத்துவதை தென்னாபிரிக்கா முழுமையாக இரத்து செய்துள்ளது.

தற்போது தென்னாபிரிக்காவில் பரவி வரும் புதுவகை கொரோனாவைத் தடுக்கும் திறன் ஒக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசிக்கு இல்லாததால் இந்தத் திட்டம் கைவிடப்படுவதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதற்குப் பதிலாக, இதுவரை அங்கீகரிக்கப்படாத ஜோன்ஸன் அண்டு ஜோன்ஸன் நிறுவன கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுவகைக் கொரோனாவை இந்தத் தடுப்பூசி எந்தளவுக்குத் தடுக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவின், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு மில்லியன் தடுப்பூசியை தென்னாபிரிக்கா பெற்றுக்கொண்டுள்ள நிலையில், சுகாதாரப் பணியாளர்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், இதற்குப் பதிலாக, ஜோன்சன் ரூ ஜோன்சன் (ஜே ரூ ஜே) மற்றும் ஃபைசர் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் அடுத்துவரும் வாரங்களில் வழங்கப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.