இதுவரையில் இலங்கையில் 61 773 பேருக்கு கொரோனா தடுப்பூசி!


இலங்கையில் நேற்றைய தினம் மேலும் ஆயிரத்து 625 சுகாதார பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, இதுவரை நாட்டில் ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 773 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மாதம் 29 ஆம் திகதி இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.