மே.தீவுகள் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 223-5!


பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது ஆட்டநேர முடிவில், போனர் 74 ஓட்டங்களுடனும் ஜோசுவா டா சில்வா 22 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.


டாக்கா மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ஓட்டங்களை பெற்றது.

இதில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில், கிரைஜ் பிரத்வெயிட் 47 ஓட்டங்களுடனும் ஜோன் கெம்பல் 36 ஓட்டங்களுடனும் மோஸ்லே 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

மேலும், கெய்ல் மேயர்ஸ் 5 ஓட்டங்களுடனும் ஜெரமைன் பிளக்வுட் 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அபு ஜெயிட் மற்றும் தைஜூல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சௌமியா சர்கார் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்னமும் 5 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாளை மேற்கிந்திய தீவுகள் அணி நாளை தொடரவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.