நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவியின் சடலம் கண்டெடுப்பு!


மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பாடசாலை மாணவியொருவரின் சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நிலையில், கண்டெடுக்கப்பட்ட மாணவி தலவாக்கலை, ரத்தினகல பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று காலை 6.30 மணிக்கு குறித்த சிறுமி தனது வீட்டை விட்டு வெளியேறியதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.