80 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு!


சுமார் 80 லட்சம் ரூபா பெறுமதியான குஷ் ரக போதைப்பொருட்கள் அடங்கிய பொதி சீதுவையில் உள்ள சுங்க பொருள் விடுவிப்பு பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

குளிர்பானம் தயாரிக்கும் இயந்திரத்துடன் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சுங்க தரப்பினரால் அந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன.

அந்த இயந்திரத்தை பலகை பெட்டி ஒன்றில் வைத்து, குறித்த போதைப்பொருட்கள் கொழும்பிலுள்ள போலியான முகவரி ஒன்றுக்கு அனுப்பப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அந்தப் பொதியை பெற்றுக்கொள்வதற்கு எவரும் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேகம் அடைந்த சுங்க அதிகாரிகள் அந்த பலகை பொதியை பரிசோதித்துள்ளனர்.

இதன்போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குஷ் ரக போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதனை காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.