கொரோனா தடுப்பூசி 100,000 க்கும் மேல் போடப்பட்டுள்ளது!


நாட்டில் இதுவரை 100,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர், தடுப்பூசியைப் பெற்றவர்களிடையே பக்க விளைவுகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசியை பெற்றுக்கொண்ட ஒருவரின் உடலில் சாதாரண உடல் வருத்தம், லேசான காய்ச்சல் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும்  இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

மேலும் அடையாளம் காணப்பட்ட 60 வயதிற்கு உட்பட்டவர்கள் அடுத்த கட்டமாக தடுப்பூசியை பெற்றுக்கொள்வார்கள் என்றும் அதே நேரத்தில் தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை 300,000 சினோபோர்ம் கொரோனா தடுப்பூசியை நன்கொடையாக வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ள போதும் தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் இதற்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.