பிரபல இயக்குனருடன் ஜோடி சேரும் ஜி.வி. பிரகாஷ்!


தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் ஜிவி பிரகாஷ், 13 ஆண்டுகளுக்கு பின் பிரபல இயக்குனர் ஹரியுடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.

அருண் விஜய் நடிக்கும் இந்த படத்தில்  பிரியா பவானி சங்கர் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். தற்போது இதில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.