தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று!


இடைக்கால  வரவு- செலவுத் திட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.

சென்னை கோட்டையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது.

அ.தி.மு.க.வின் 5  வருட கால ஆட்சி, எதிர்வரும் மே மாதம் நிறைவடைய உள்ளமையால்,  இந்த  வருடத்தின் இடைக்கால வரவு- செலவுத் திட்டத்தைதான் எதிர்வருகிற சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்ய முடியும்.

இதேவேளை சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால், தற்போது தாக்கல் செய்யப்படவுள்ள வரவு- செலவுத் திட்டத்தில், மக்களை கவரும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த 6 மாத கால இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய அம்சங்களை இடம்பெற செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்கவே அமைச்சரவை கூட்டம்  இன்று கூட்டப்படுகிறது.

இந்த கூட்டத்தில் வரவு- செலவுத் திட்டத்துக்கு இறுதி வடிவமும் கொடுக்கப்பட உள்ளது.  மேலும் எதிர்வரும் 22ஆம் திகதிக்கு பின்னர்  சட்டசபை வரவு- செலவுத் திட்டக் கூட்டத்தொடரும் நடைபெறலாம் எனவும் கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.