தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் சந்திப்பு!


தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் மீண்டும் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடவுள்ளன.

யாழ் புறநகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் இன்று முற்பகல் 10.00 மணிக்கு குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

 வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடக்கிறது. அனைத்து தமிழ் தேசிய கட்சிகளிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொத்துவில்- பொலிகண்டி பேரணி அறிவிப்பிற்கு முன்னதாக எம்.கே.சிவாஜிலிங்கத்தின் அழைப்பில் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பை நடத்தினர்.

அந்த சந்திப்பின் தொடர்ச்சியாக, ஒரு வெகுஜன போராட்டம் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், அந்த அறிவிப்பிற்கு முன்னதாக எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர் பொத்துவில்-பொலிகண்டி பேரணி அறிவிப்பை விடுத்திருந்தனர்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியின் பின்னர் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் இன்று முதன்முறையாக ஒன்று கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.