கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்தில் நூலகம் திறந்து வைப்பு!!
கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்தில் அமைக்கப்பட்ட நூலகம், வட.மாகாண ஆளுநரால் இன்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்ட வட.மாகாண ஆளுநர் அதனை திறந்து வைத்தார்.
இயற்கை வடிவமைப்பில் அமைக்கப்பட்ட குறித்த நூலகமானது சுதந்திர தின நாளின் நினைவாக இன்று காலை திறந்த வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்றைய நாளின் ஞாபகார்த்தமாக மரக்கன்றும் நாட்டி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை