தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன மேலும் சில பகுதிகள்!


இலங்கையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள், இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், நாரஹேன்பிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட100 ஆம் இலக்க தோட்டம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும், துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகத்துவாரம் – அன்றூஸ் வீதி, புனித அன்றூஸ் பகுதி ஆகியவற்றின் தனிமைப்படுத்தலும் தளர்த்தப்பட்டுள்ளன.

அத்தோடு, பேலியகொடை பொலிஸ் பிரிவின் கங்கபட கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 90 ஆம் இலக்க தோட்டம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.