“குழந்தைகளிற்கான மரத்தோட்டம்” எனும் வேலைத்திட்டத்தின் ஆரம்பம்!


ஐனாதிபதியின் சௌபாக்கிய கொள்கையின் அடிப்படையில் “குழந்தைகளிற்கான மரத்தோட்டம்” என்ற தொணிப்பொருளில்  மரநடுகை வேலைத்திட்டத்தின் ஆரம்பவிழா வவுனியா புதுக்குளம் கனிஸ்ட மகாவித்தியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 10மணிக்கு இடம்பெற்றது.

வவுனியா மாவட்டச்செயலகத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் கலந்துகொண்டார்.

நிகழ்வில் பாடசாலை வளாகத்தில் மாமரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டதுடன்,மாணவர்களிற்கும் மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதேசசபையின் தவிசாளர்களான ச.ஜெகதீஸ்வரன்,ச.தணிகாசலம், வலயக்கல்வி பணிப்பாளர் சு.அன்னமலர்,கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் இ.விஜயகுமார்,மாவட்ட விவசாய பணிப்பாளர் பி.ஈஸ்வரன், பாடசாலைஅதிபர் கமலாம்பிகை, ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் கலந்துகொன்டிருந்தனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.