பதுளை மாநகர சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!


பதுளை மாநகர சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முசம்மில் அறிவித்துள்ளார்.

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முசம்மில் கையெழுத்திட்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு மூலம் இந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாநகர சபையின் அதிகாரங்கள் விசேட ஆணையாளரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பதுளை மாநகர சபையின் விசேட ஆணையாளராக எச். எம். ஜீவந்த ஹேரத் இன்று (புதன்கிழமை) முதல் உடன் அமுலாகும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் மாநகர சபை சட்டங்களின் அடிப்படையில், மாகாண ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.