பிள்ளையான் கொவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டார்!
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு இன்று கொவிட்-19 தடுப்பூ ஏற்றப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
அதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மாவட்டங்களில் கொவிட்-19 தடுப்பூசி ஏற்ற முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது
இதனையடுத்து மட்டக்களப்பு வைத்திய அதிகாரிகள் பிரிவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தடுப்பூசி ஏற்றம் நடவடிக்கை இன்று இடம்பெற்றது.
இதன்போதே பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தனும் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை