அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் - அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ஜோகோவிச்!


அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 4 ஆவது சுற்றுக்கு செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகின்றது.

இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், ரேங்கிங்கில் முதலிடத்தில் இருக்கும் நோவக் ஜோகோவிச் 7-6 (7-1), 6-4, 3-6, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் 31 ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சை தோற்கடித்தார்.

இதனையடுத்து அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் 14-வது முறையாக 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார் ஜோகாவிச்.

அதேபோல தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் அர்ஜென்டினா வீரர் டிகோ ஸ்வார்ட்ஸ்மான் 3-6, 3-6, 3-6 என்ற நேர்செட்டில் ரஷ்யாவின் அஸ்லான் கராட்செவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

அதே சமயம் ஆஸ்திரியாவின் டொமினிக் திம், ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், பல்கேரியாவின் டிமிட்ரோவ், கனடாவின் பெலிக்ஸ் ஆஜெர் மற்றும் மிலோஸ் ராவ்னிக், செர்பியாவின் துசென் லாஜோவிச் ஆகியோர் தங்களது சுற்றுகளில் வென்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.