ஐக்கிய மக்கள் சக்தியின் 100 தொகுதி அமைப்பாளர்கள் நியமனம்!


ஐக்கிய மக்கள் சக்தியின் 100 தொகுதி அமைப்பாளர்களை நியமிக்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியினை கீழ் மட்டத்தில் இருந்து வலுப்படுத்துவதற்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என கட்சியின் தேசிய தொகுதி அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க  தெரிவித்துள்ளார்.

கீழ் மட்டத்தில் இருந்து செயற்படும் பெண்கள், இளைஞர்களை பாதுகாத்தல், ஒன்றிணைத்தல் உள்ளிட்ட பல பொறுப்புக்கள் நியமிக்கப்படவுள்ள தொகுதி அமைப்பாளர்களுக்கு ஒப்படைக்கப்படவுள்ளன.

அத்துடன் இந்த பொறுப்புக்கள் நிறைவேற்றப்படுகிறாதா என்பது தொடர்பில் காண்காணிக்கப்படவுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.