ஈழத்தில் ஆயுதமுனை தடைகளை உடைத்தெறிந்து எழுந்தது மக்கள் எழுச்சி!
வெளிநாட்டுக்கு வந்தோமா, கிடைக்கிறதைத் தின்றோமா, ஏதோ முடிஞ்சதை மண்ணுக்காகச் செய்தோமா ... இப்பிடியே செத்துப்போயிருவோமா என்ற பயம் கலந்த வாழ்க்கை 2009 இற்குப் பின் அப்பிக்கிடந்தது.
இதுவரைக்கும் விடுமுறை என்று எங்கும் போனதுமில்லை, அதற்கான மனநிலையும் இருந்ததில்லை , இவ்வளவும் தான் வாழ்க்கை என்று சலிப்போடு நாட்களை நகர்த்திக்கொண்டிந்தவர்கள்
இன்னும் இருக்கிறது வாழ்க்கை என்றுசொல்லும் ஏதோ ஓர் ஒளிக்கீற்றுத் தென்படுகிறது...!!!
நெற்றிக்கு நேரே நீளும் துவக்குமுனைகளுக்கு பயப்பிடாமல் எழுந்து நிற்கும் இவர்களைப் போலத் துணிதல் அவ்வளவு இலகுவானதல்ல...
-தேவன்
07.02.2021

.jpeg
)





கருத்துகள் இல்லை