சுவாமி விபுலாநந்தர் கற்கை நிறுவனத்தின் பணிப்பாளராக பாரதி நியமனம்!


கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் கற்கை நிறுவகத்தின் புதிய பணியாளராக திருமதி. பாரதி கென்னடி நியமிக்கப் பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை வானொலி புகழ் நாடக தயாரிப்பாளர், எழுத்தாளர், சிறுகதை படைப்பாளி மூத்த எழுத்தாளர் ஜோர்ச் சந்திரசேகரத்தின் புதல்வியும் ஆவார்.

அத்துடன் , கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் இலங்கை கணக்காளர் சேவை, இலங்கை நிர்வாக சேவை போன்றவற்றிலும் கலாநிதி பாரதி பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.