கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய பணிப்பாளர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்!


கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் புதிய பணிப்பாளராக கலாநிதி லோரன்ஸ் பாரதி கெனடி இன்று (திங்கட்கிழமை) தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வுகளில் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் திருமலை வளாகத்தின் பணிப்பாளர் கனகசிங்கம், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமுலை வளாகத்தின் கலை கலாசார பீடம் தலைவர் கெனடி, முன்னாள் பதில் பணிப்பாளர் அம்மன் கிளி முருகு தாஸ், மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தர் மகராஜ், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பிரதிப் பதிவாளர் விஜயகுமார் மற்றும் பல்கழைக்கழக விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்களென பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது இராம கிருஸ்ணமிசனுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் நிறுவகத்தில் சுவாமி விபுலானந்தரின் சிலைக்கு மலர் மாலையணிவிக்கப்பட்டதை தொடர்ந்து தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து புதிய பணிப்பாளரை வரவேற்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றன. இலங்கை வானொலி புகழ் நாடக தயாரிப்பாளர், எழுத்தாளர், சிறுகதை படைப்பாளி மூத்த எழுத்தாளர் ஜோர்ச் சந்திரசேகரத்தின் புதல்வியாவார்.

கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளராகவும் இலங்கை கணக்காளர் சேவை, இலங்கை நிர்வாக சேவை போன்றவற்றைவற்றின் தகுயையும் கொண்டவராக கலாநிதி லோரன்ஸ் பாரதி கெனடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.