இன்று உலக சதுப்பு நில தினம்!
19 71 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி ஈரானின் ரம்சார் நகரில் எட்டப்பட்ட சர்வதேச சதுப்பு நில உடன்படிக்கையின் பிரகாரம் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 2 ஆம் திகதி சதுப்பு நில தினமாக அனுஷ்டிக்கப்படுவது வழக்கம்.
உயிரியல் சுற்றாடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகின்ற சதுப்பு நில சூழலியல் தொகுதிகளைப் பாதுகாப்பது இதன் நோக்கமாகும்.
ஒட்டுமொத்த புவி மேற்பரப்பில் 6 சதவீதம் சதுப்பு நிலமாகும். இலங்கையின் நிலப்பரப்பில் 15 சதவீதம் சதுப்பு நிலமாகக் காணப்படுகின்றது. 1990 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி தென் மாகாணத்தில் பூந்தல சரணாலயம் ரம்சார் சதுப்பு நில பட்டியலில் சேர்க்கப்பட்டது.
அதே ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி இலங்கை சர்வதேச சதுப்பு நில உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது.
இதனைத் தொடர்ந்து இலங்கையில் பூந்தல தேசிய பூங்கா, ஆனைவிழுந்தான் சரணாலயம், மாதுகங்க சரணாலயம், வங்காலை சரணாலயம், குமண தேசிய பூங்கா, வில்பத்து தேசிய பூங்கா ஆகியவை ரம்சார் சதுப்பு நிலங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை