ஜேர்மனில் பிரபல அறிவியலாளரின் எச்சரிக்கை!


ஜேர்மனியில் பிரித்தானிய வகை கொரோனா வைரஸ் பரவுவதால், அதிக அளவில் சிறுவர்கள் பாதிக்கப்படுவார்கள் என Robert Koch நிறுவனத்தின் தலைவரான Lothar Wieler எச்சரிக்கி விடுத்துள்ளார்.

இந்த பிரித்தானிய வகை கொரோனா வைரஸ் பயங்கரமாக தொற்றக்கூடியது என்பதால், வரும் வாரங்களில் அதிக அளவில் சிறுவர்கள், பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் சிலர் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை போட்டுக்கொள்ள மறுத்துவருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நம் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள அனைத்து தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை மற்றும் செயல் திறன் வாய்ந்தவைதான் என்று கூறியுள்ள அவர், அவை அனைத்துமே கொரோனாவிலிருந்து நம்மைக் காக்கும் என்பதுடன் , அவை புதிய கொரோனா வைரஸ்களிடமிருந்தும் நம்மைப் பாதுகாக்கும் என்றும் கூறியுள்ளார்.

பிரித்தானிய வகை கொரோனா வைரஸ் பயங்கரமாக ஜேர்மனியில் பரவி வருகிறது என்று கூறியுள்ள Wieler, அதனால் ஜேர்மனியில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது மேலும் மேலும் கடினமாகி வருகிறது என்றார்.

எனவே, காரில் சென்றாலும் சரி, பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தினாலும் சரி, அலுவலகத்திற்கு சென்றாலும் சரி, மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள், மற்றவர்களை சந்திப்பதை எந்த அளவுக்கு குறைக்கமுடியுமோ அந்த அளவுக்கு குறைத்துக்கொள்ளுமாறும் Wieler அறிவுறுத்தியுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.