தென்னிலங்கை பல்கலை மாணவியின் நெகிழ்ச்சியான செயல்!!

 


இலங்கையில் யாழ் பல்கலைகழக யுவதி ஒருவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


தென்னிலங்கையை சேர்ந்த Lakmali என்ற பெண்ணின் பட்டமளிப்பு விழா புகைப்படங்களே இவ்வாறு பலரையும் கவர்ந்துள்ளது.


படித்து பல்கலைக்கழத்தில் பட்டம்பெறுவது என்பது மிகவும் சாதாரண விடயம் அன்று. நீண்ட நாள் கனவு மற்று லட்சியத்துடன் செயல்படுபவரே தங்களுக்கான இலக்கினை அடைகின்றனர்.


இன்றைய காலகட்டத்தில் வசதியான வீட்டு பிள்ளைகளைவிட வறியகுடும்பத்தில் உள்ள பிள்ளைகளே நம் நாட்டில் கல்வியில் சிறந்து விளங்குகின்றார்கள். வசதியான வீட்டு பிள்ளைகளுக்கு படித்தால் போதும் என நினைப்பார்கள். ஆனால் வறிய குடும்பத்து பிள்ளைகளைதான் தாம் சாதிக்கவேண்டும் என்கின்ற லட்சியத்தை கனவாககொண்டு அதில் பயணிப்பார்கள். 

அத்துடன் தமது லட்சியம் ஈடேறியவுடன் அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அதுபோலதான் யாழ் பல்கலைகழகத்தில் கல்வி பயின்று பட்டம் பெற்ற லக்மாலி எனும் குறித்த யுவதி தனது பட்டமளிப்பு விழா உடையுடன் எடுத்த புகைப்படங்களே இவ்வாறு சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.


இது குறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ள லக்மாலி,


யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள். நான் இன்று இந்த வெற்றியை பெற அவர்களும் காரணம். என் வாழ்நாளில் அவர்களை என்றும் மறக்கமாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.


இந் நிலையில், பலரும் குறித்த யுவதிக்கு வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.