கிண்ணியா குளத்தில் மூழ்கி மாயமான மீனவர்!


 கிண்ணியா சுங்கான் குழி குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நடு ஊற்று சுனாமி குடியேற்றத் திட்டத்தில் வசித்து வந்த 2 மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக நேற்று மாலை 6.30 மணியளவில் சுங்கான் குழி குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்ற போதே ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இவ்வாறு காணாமல் போனவர் 77 வயதுடைய நபர் என்றும் தெரியவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நேற்று மாலை இருவரும் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேளை திடீரென தோணி கவிழ்ந்துள்ளது. அதனையடுத்து ஒருவர் நீந்தி கரை சேர்ந்துள்ளார். மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார்.

இதுகுறித்து உறவினர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதோடு காணாமற்போனவரை பொதுமக்கள் தேடியும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், காணாமல் போன மீனவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. காணாமல் போன நபரைத் தேடும் பணியில் தொடர்ந்தும் பொது மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.