குறுஞ்செய்திகள் தொடர்பில் எச்சரிக்கை!


 காதலர் தினத்திற்காக ஏற்பாடு செய்கின்ற சட்ட விரோத கொண்டாட்டங்கள் தொடர்பாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணனி குற்றவியல் விசாரணை பிரிவு ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு சுகாதார பிரிவு அதிகாரிகளின் அனுமதியை பெறவேண்டும் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவல்துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாளை அல்லது நாளை மறுதினம் உங்களது தொலைபேசிகளுக்கு அல்லது சமூக ஊடகங்களுக்கு நீங்கள் காதலர்கள் உங்களுக்கு பரிசளித்துள்ளதாகவும் அதனை விநியோகம் செய்வதற்கான பணத்தை முதலிடுமாறும் குறுஞ்செய்திகள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் இவை மோசடிகளாகவே இருக்க கூடும் எனவும் அவ்வாறான செயற்பாடுகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.