சைபர் செயற்பாடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை!

 




நாட்டில் சமூக வலைதளங்கள் மற்றும் சைபர் செயற்பாடுகள் தொடர்பான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆய்வுகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழு இந்த விடயத்தினை குறிப்பட்டுள்ளது.

ஐ.எஸ். தவ்ஹீத் மற்றும் வஹாபிசம் உள்ளிட்ட தீவிரவாத கருத்துக்கள் சமூக வலைதளங்கள் ஊடாகவே அதிகமாக இலங்கைக்குள் கொண்டுவரப்படுவதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்காரணமாக, நாட்டில் சமூக வலைதளங்கள் மற்றும் சைபர் செயற்பாடுகள் தொடர்பான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

அத்துடன் வெவ்வேறு சமூகங்களுக்கிடையிலான வேறுபாடுகளைத் தடுக்க ஒரு நாடு ஒரு சட்டம் என்ற விடயத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி ஆணைக்கு தமது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.