இனி இரண்டு முகக்கவசங்கள் அணிய வேண்டும்!


 2019-ம் ஆண்டு இறுதிப்பகுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகையே ஒரு ஆட்டு ஆடிவிட்டது.

அதிலும் குறிப்பாக உலகின் வல்லாதிக்க நாடுகளில் கோர தாண்டவம் ஆடியது.

இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் இலங்கையையும் விட்டுவைக்காமல் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இரண்டு முகக்கவசங்களை அணிவதன் ஊடாக கொரோனா வைரஸிடம் இருந்து அதிக பாதுகாப்பை பெற முடியும் என அமெரிக்கா தொற்று நோய் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சத்திரசிகிச்சை முகக்கவசத்துடன் துணியிலான முகக்கவசமொன்றை அணிவதன் ஊடாக வைரஸிடம் இருந்து 92.5 சதவீத பாதுகாப்பை பெற முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

பொது இடங்களுக்கு செல்லும் போது 2 வயதுக்கும் அதிகமான அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.