பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் துணிகர சைக்கிள் திருட்டு!!

 


நெல்லியடி நகரில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள கடை ஒன்றில் பொருட்கள் வாங்குவதற்காக சென்ற இளம் பெண்ணொருவர் பெண்கள் துவிச்சக்கர வண்டியை கடைக்கு முன்னால் நிறுத்தி வைத்து விட்டு பொருட்களை வாங்கச் சென்றுள்ளார். இந்த நிலையில் அங்கு பொருட்களை வாங்கிய  ஒருவர் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓடியுள்ளார். இதனை அவதானித்த குறித்த சைக்கிளுக்கு உரிய பெண்ணும் கத்திக்கொண்டு துரத்திச் சென்றுள்ளார். இதனை அவதானித்த நெல்லியடி பொலிசார் அவரை துரத்தி சென்ற பொழுது திருடன்  தலைதெறிக்க ஓடிமறைந்து உள்ளார்  நெல்லியடி நகர பகுதியில் அடிக்கடி சைக்கிள் களவுகள் போய் வருவது கவலைக்குரியது. திருடர்களைப் பிடிப்பதற்கு பொதுமக்கள் உதவி செய்ய வேண்டும் என போலீசார் தெரிவித்தார்கள்.


நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு முன்னாள் உள்ள கடையில் இடம்பெற்ற இந்த திருட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.