பிரதமரின் அறிவிப்பின் பின்னரும் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் கட்டாய தகனம்!


 கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாடளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதன் பின்னரும் , நேற்று ஒருவரின் உடல் கட்டாய தகனம் செய்யப்பட்டுள்ள நிலையில் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளப்பியுள்ளது.

புத்தளத்தை சேர்ந்த முஹம்மட் சமீம் என்பவரே இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்த நிலையில் , அவரது சடலம் கட்டாய தகனம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிசாத் பதியுதீனும் தனது பேஸ்புக் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.