தடுப்பூசி ஏற்றி பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை!


 இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 64 505 ஆக அதிகரித்துள்ளது. இன்று திங்கட்கிழமை மாலை 7 மணி வரை 348 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

நாட்டில் இது வரையில் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 60 174 தொற்றாளர்கள் இரண்டாம் அலையுடன் தொடர்புடையவர்களாவர்.

58 075 தொற்றாளர்கள் இது வரையில் குணமடைந்துள்ளதோடு , 6114 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மரணங்களின் எண்ணிக்கை 316 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்தை அண்மித்தது, தடுப்பூசி ஏற்றப்பட்ட 59 ஆயிரம் பேரில் எவருக்கும் பக்கவிளைவு இல்லை.

நாடளாவிய ரீதியில் 79 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 11 399 சிகிச்சை படுக்கைகள் உள்ளன. அவற்றில் 8267 படுக்கைகள் பாவனையிலுள்ளன.

இதேவேளை நாடளாவிய ரீதியில் 146 அவசர சிகிச்சை பிரிவிற்கான படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளதோடு அவற்றில் 24 படுக்கைகளில் மாத்திரமே தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 13 392 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 59 154 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. ஞாயிறன்று மாத்திரம் 21 329 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியை ஏற்றிக் கொண்ட எவருக்கும் இதுவரையில் பாரதூரமான பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்று பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.