பஸில் - விமல் மோதல் பின்னணியில் யார்?

 


பஸில் ராஜபக்ச மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ஸ தரப்பினரிடையே தற்போது ஏற்பட்டுள்ள மோதலின் பின்புலத்தில் பிரபல முன்னணி பௌத்த பிக்குகள் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் இருதரப்பினரும் சரமாரியாக பௌத்த பிக்குகள் மீது விமர்சனங்களை தொடுக்க தயாராகி வருவதாக தென்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர் உள்ளிட்டவர்களை பஸில் தரப்பினர் மடக்குவதற்கு முயற்சித்து வருவதாக நெலும்மாவத்த தகவல் தெரிவிக்கின்றது.

தற்போது அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு சார்பாக முருந்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட குழுவினர் ஆதரவாக பேசி வருகின்றனர்.

ஆனாலும் பஸில் தரப்பினருக்கு இதுவரை எந்தவொரு பௌத்த தேரரும் ஆதரவாக கருத்து வெளியிட முன்வராதிருப்பதால் தற்போது பௌத்த விகாரைகள் தோறும் சென்று கோரிக்கை முன்வைத்து வருவதாகவும் நம்பகர வட்டாரங்கள் தெரிவிப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.