பவுசர்-முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் பலி!


 அவிசாவளை – கொழும்பு வீதியின் கொஸ்கம, சாலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (09) மாலை 6.05 மணிக்கு கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்று எதிரில் வந்த பவுஸர் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

முச்சக்கரவண்டி வீதியில் கவிழ்ந்துச் சென்று பவுஸரில் மோதியுள்ள நிலையில் முச்சக்கரவண்டியில் பின்னால் அமர்ந்து சென்ற ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் குழந்தையொன்று அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் கொஸ்கம பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பவுஸரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.