மேற்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க உத்தேசம்!


 கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க உத்தேசித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்தியாவுடனான உறவு ஒரு திட்டத்துடன் மாத்திரம் முடிந்து போகாது எனவும், இரு நாடுகளுக்கும் இடையேயான சிறந்த நட்புறவின் மூலம் இந்தச் சிக்கல்களைத் தீர்க்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவுடனான பாரிய திட்டங்கள், முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் தொடரும் என தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஆரம்பம் முதல் அரசாங்கத்துக்கு கிழக்கு முனையம் தொடர்பாக பாரிய அர்ப்பணிப்பு காணப்பட்டது எனவும், இலங்கை துறைமுகங்கள் அதிகார சபை நடத்திய பேச்சுவார்தைகளின் தோல்வி இந்தப் பிரச்சினையில் பாரிய செல்வாக்குச் செலுத்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.