குருந்தனூர் மலையில் வைத்தே பௌத்த இதிகாசம் எழுதப்பட்டதாம்!

 


முல்லைத்தீவு குருந்தனூர் மலையில் வைத்தே பௌத்த முக்கிய இதிகாசங்களில் ஒன்றான குருந்தி இதிகாசம், எழுதப்பட்டுள்ளதாக ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழக பௌத்தபீட விரிவுரையாளர் பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அகழ்வு ஆராச்சி பணிகள் முன்னெடுக்கப்படும் குருந்தூர் மலைக்கு பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட பௌத்த மதகுருமார்கள் படை அதிகாரிகளுடன் கடந்த 30 ஆம் திகதி சென்றிருந்தனர்.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அபயதிஸ்ஸ தேரர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மகாவம்சம் மற்றும் எமது இதிகாசங்களில் சொல்லப்பட்ட குருந்து விகாரை, குருந்தாசோக விகாரை ஆகியவற்றை பார்க்கவே நாம் வந்தோம். அங்கு ஒரு விகாரை இருந்தது பின்னர் அழிவடைந்து விட்டது. அந்த இடங்களில் அதன் சிதைவுகள் உள்ளன. அத்துடன் சந்திரவட்டக்கல் போன்ற விகாரைக்குரிய சின்னங்கள் அங்கு சிததைவடைந்த நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

சிங்களத்தில் உள்ள எட்டு இதிகாசங்களில் 2 பாளி மொழியில் உள்ளன. ஏனையவை சிங்கத்தில் உள்ளன. இதிலொன்று குருந்தி இதிகாசம் ஆகும். இது இந்த இடத்தில் வைத்தே எழுதப்பட்டது எனவும் தேரர் தெரிவித்தார்.

அதோடு குருந்தகாசரியோ என்ற விகாராதிபதியினாலேயே இந்த இடம் உருவானதாக குறிப்பிட்ட அவர், இலங்கையில் எல்லா சமூகமும் வர்க்க பேதமின்றி அவரவர்கள் தத்தமது இடங்களை உரிமை கொண்டாட முடியும் என்றும், இ்ந்த இடம் இலங்கையின் முக்கியமான இடம் என்பதனாலேயே அதனை பார்வையிட தாம் வந்ததாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.