“அவ்வாறு செய்வதற்கு நான் கனவிலும் நினைக்கவில்லை”

 


‘தேவாலகம்’ சட்டத்தை இரத்து செய்வதற்கோ அல்லது அதில் திருத்தம் மேற்கொள்வதற்கோ எந்த எதிர்பார்ப்பும் தமக்கு கிடையாதென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மேலும் அவ்வாறு செய்வதற்கு தாம் கனவிலும் நினைக்கவில்லையென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நீதி அமைச்சில் நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்,

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் நாடாளுமன்றத்தில் 27/2 பிரேரணையில் உரையாற்றும் போது அதற்கு நான் பதிலளித்தேன். அதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு சமூகத்தில் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

அத்துரலியே ரதன தேரர் முன்வைத்த கேள்விக்கமைய16 ஆவது சரத்து நீக்கப்பட்டால் அதன் கீழ் வரும் அனைத்து சட்டங்களும் வீழ்ச்சியடைவற்கு வாய்ப்புள்ளதென நான் பதிலளித்தேன். அதைவிட வேறு எந்த கருத்தையும் நான் அங்கு முன்வைக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

2,500 வருட வரலாற்றைக் கொண்ட பௌத்த கலாசாரப் பண்புகள் நடைமுறையிலுள்ள நாட்டின் சிங்கள பௌத்த மக்களின் பாரம்பரிய உரிமைகளுக்கு எதிராக சட்டம் கொண்டுவருவதற்கு எவ்வகையிலும் முடியாது.

தற்போதைய அரசாங்கத்திற்கு அவ்வாறு செயற்படுவதற்கான எந்த அவசியமும் கிடையாது என்பதை தாம் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.