வவுனியா வரை இராணுவ வாகன பேரணி!


 காங்கேசந்துறை முதல் வவுனியா வரை இராணுவ வாகன பேரணி ஒன்று இன்றுகாலை முதல் நகர்ந்து வரும் நிலையில் பொலிகண்டி பகுதியில் திடீரென இராணுவம் அதிகளவில் குவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் குறித்த வாகனப்பேரணி பொலிகண்டி ஆலடி பகுதிக்கும் பொலிகை கந்தவனபதி முருகன் கோவில் சந்திக்கும் இடைப்பட்ட பகுதில் தற்போது தரித்து நிற்கிறது.

வாகனப் பேரணியில் பயணித்த கவச வாகனம் ஒன்று பழுதடைந்த நிலையில் (அல்லது ஒத்திகை நிகழ்வாகவும் இருக்கலாம்) அதனை ஏற்றும் பிரத்தியேக வாகனத்தில் ஏற்றும் நடவடிக்கை நடந்து வருகிறது.

அதனால் குறித்த வாகனப் பேரணி நகராது முடங்கியுள்ளது. இதையடுத்து குறித்த வாகனப் பேரணியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வீதியின் இருமருங்கிலும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.