புதிய வழிகாட்டல் அடுத்தவாரம் வெளியாகும்!


 கொவிட் தொற்றில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் அல்லது தகனம் செய்வது தொடர்பான புதிய வழிகாட்டல் அடுத்தவாரம் ஆரம்பத்தில் வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதியளித்த விசேட வர்த்தமானி அறிவிப்பு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டிருந்தது.

வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் பிரகாரம், கொவிட்டில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் அல்லது தகனம் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவிப்புக்கமையவே மேற்கொள்ளப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டடிருக்கின்ற போதும் வழிகாட்டல் அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்நிலையிலேயே இதுதொடர்பாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில்,

கொவிட் தொற்றில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் அல்லது தகனம் செய்வது தொடர்பான புதிய வழிகாட்டல் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றனது.

இதுதொடர்பாக ஆராய்ந்து, அடுத்தவார ஆரம்பத்தில் வழிகாட்டல் அடங்கிய அறிவிப்பை வெளியிட எதிர்பார்க்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.