பிரித்தானியாவில் மீண்டும் உருமாறிய கோவிட்!


 பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட கோவிட் – 19 வைரஸ் மீண்டும் உருமாற்றம் அடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரித்தானியாவில் B.1.1.7 எனும் புதிய உருமாறிய கோவிட் – 19 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

அது முன்னர் கண்டறியப்பட்ட மற்ற அனைத்து வகைகளையும் விட மிகவும் அதிகமாக தொற்றக்கூடியது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மேலும், தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் வெவ்வேறு புதிய உருமாறிய வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, இப்போது உள்ள தடுப்பூசிகளை இந்த அனைத்து புதிய வகைகளுக்கும் எதிராக சக்திவாய்ந்ததாக மாற்றுவதற்காக நிறுவனங்கள் தற்போது செயல்படுகின்றன.

இந்த நிலையில், உலகிற்கே அதிர்ச்சியூட்டும் விதமாக, பிரித்தானிய வகை கோவிட் – 19 வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இலட்சக்கணக்கான மாதிரிகள் வீடுவீடாக சென்று சேகரிக்கப்பட்டதில், பிரிஸ்டலில் 11 பேருக்கும் மற்றும் லிவர்பூல் பகுதியில் 32 பேருக்கும் இந்த புதிய மாறுபாடு இருந்தது தெரியவந்துள்ளது.

இந்த புதிய வைரஸ் திரிபு E484K எனப்படும் பிறழ்வைக் காட்டியுள்ளது என்று பிரித்தானிய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த திரிபு (mutation) தற்போது உலகம் முழுவதும் நிர்வகிக்கப்படும் தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த பிறழ்வு ஏற்கனவே தென்னாப்பிரிக்க வகை (N501Y) உருமாறிய வைரஸிலும் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.