சொக்லேற் கனவுகள் 21 - கோபிகை!!


மூச்சு விடாமல் 

பேசிவிட்ட ஆதியின்

முகம் பார்த்தாள்

அனுதி. 

 

கண்களுக்குள்

காதலின் நளினங்கள்

கதைபேசின,

சிரித்து தாவின.....


நீயும் நானும்

சின்ன வயசு முதல்

நேசிச்ச அன்பு

காதலா ஆதி?


'ம்.....ம்.....

பைபிளில 

ஆதி மனிதன் பற்றி

கதை இருக்கு 

தெரியுமா?'

'என்னது?'

விழிகளை விரித்தவளை

வைத்தகண் வாங்காது

பார்த்தான்....


'ஆதீ......ஆ..தீ......'

அனுதி அழைத்ததும்

சட்டென்று 

சுயநிலைக்கு மீண்டான். 


'ம்.....அது...அதுதான்..'

'ஆதாம் ஏவாள் கதை,

கடவுளின் முதல் படைப்பு

ஆதாமும் ஏவாளும்.....'


'ம்.......'

அனுதி தலையாட்ட

இவன் தொடர்ந்தான். 


'ஆதாமின் என்ற மனுஷனின்

விலா எலும்பில் இருந்துதான்

ஏவாள் என்ற மனுஷி

படைக்கப்பட்டாள்' 

'ஆதாமின் பாதியானவள்,

அவனுடைய முழுமை,

அவனிலிருந்து உருவான

ஏவாள் மட்டுமே' 


'ஆதாம் இல்லாத ஏவாளோ,

ஏவாள் இல்லாத ஆதாமோ

ஒருபோதும் முழுமையில்லை 

அது கடவுளின் திட்டம்' 


'அதுமாதிரித் தான்

நீயும் நானும்....

நீயில்லாத நானோ

நானில்லாத நீயோ

முழுமை இல்லை'


'எனக்காக 

என் விலாவிலிருந்து

உருவான 

என்னவள் நீ' 


'தவிர, 

நம் உறவு 

ஜென்மங்கள் கடந்த

பந்தம் அனு....'


அவள் வார்த்தையில்

விழிகள் ஒருநொடி

பளிச்சிட்டது

அனுதிக்கு.


அவன் சொன்ன 

ஒவ்வொன்றும்

காதலின் ஆலாபனை 

என்றாலும்......


'அனு .......'என்ற 

அவனின் செல்லச் சுருக்கம்

மனதோரம் மெல்ல

மாமழை தூவியது.....


புலர்ந்து வந்த ஆதவனின்

செவ்வொளியில்

அவர்களின் முகத்தில்

காதலின் பிரகாசம்......


கனவுகள் தொடரும்

கோபிகை.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.